கழக அறிமுகம்

அங்கீகாரம்

உலகப் பொதுமறையாம் திருக்குறளின் வழி, தமிழ் மொழி இந்த சிங்கை நாட்டில் தொடர்ந்து ஒரு வாழும் மொழியாக நிலைத்திருக்க தொடர்ந்து இருபத்திரண்டு ஆண்டுகள் உன்னத பணி ஆற்றி வருகிறது தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்.

ஆண்டு தோறும் தொடர்ந்து திருக்குறள் விழாவில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்கும் இளைஞர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் பெருகி வருவதை காணும் பொழுது குறள் வழி தமிழ் மொழி வளர தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் செய்துவரும் பணிக்கு தமிழ் பேசும் மக்களிடையே சிறப்பான ஆதரவு பெருகிவருவதை வெளிப்படுத்துகிறது.

மேலும், இவ்வாண்டு மிகச் சிறப்பான முறையில் ‘திரையிசையில் திருக்குறள்‘ என்ற தலைப்பில் திருக்குறள் விழா மேடையேறுவது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் என்றால் திருக்குறள் விழா என்று போற்றிப்புகழப்படும் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் பணி மேலும் சிறப்பாக வளர்ந்திட என் இனிய வாழ்த்துக்கள்.

R.இராஜாராம்
செயலாளர்
வளர்தமிழ் இயக்கம்.