பேச்சாளர் மன்றம்

தமிழ் மக்களிடையே குறிப்பாக தமிழ் இளைஞர்களிடையே தமிழ் மொழியைச் சரளமாக பேசுவதற்கு ஊக்குவிக்கவும் அவர்களது தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கவும் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பேச்சாளர் மன்றத்தை உருவாக்கியுள்ளது.

1924ல் தொடங்கப்பட்ட, அமெரிக்காவை தலைமையாகக் கொண்ட டோஸ்ட்மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனலுடன் (Toastmaster International)  இணைந்து 2002 ஜுன் முதல் கழகத்தின் பேச்சாளர் மன்றம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்கவிழா 8.2.2003ல் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றது. தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை கழகத்தின் பேச்சாளர் மன்றக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

 பேச்சாளர் மன்றத்தின் பயன்கள் என்ன ?

  • தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள
  • ஒரு சிறந்த பேச்சாளர் ஆக
  • தலைமைத்துவ பண்பை வளர்த்து கொள்ள