பாரதியார் விழா

தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் வளர்தமிழ் இயக்குத்துடன் இணைந்து முதன் முறையாக 2.9.2001ல் பாரதியார் விழாவைக் கொண்டாடியது. விழா தொடர்பில் இரு பிரிவுகளுக்குப் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவச் சிறுவன் பாரதியார் வேடமேற்று பார்வையாளர்களை வரவேற்றதும் இன்னொரு மாணவர் பாரதியார் வேடமிட்டு மேடையேறி உரையாற்றியதும் பார்வையார்களின் பாராட்டுகளைப் பெற்றன.

2002ம் ஆண்டு முதல் மகாகவி பாரதியார் விழாவோடு பாவேந்தர் பாரதிதாசனையும் இணைத்து பாரதியார் – பாரதிதாசன் விழா என்ற பெயரில் மிகச் சிறப்பாக தொடர்ந்து ஆண்டுதோறும் விழா நடத்தப்படுகின்றன. விழா மேடையில் வெற்றி பெற்றோர்க்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

சமீப காலமாக விழாவில் உள்ளூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள் சிறப்பிக்கப்படும் அங்கமும் இணைக்கப்பட்டு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இலக்கியவாதிகளுக்கு பாரதியார் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.

தமிழ்மொழி மற்றும் பண்பாடு கலை ஆகிய அம்சங்களில் மகளிர்க்கான அவர்களது பங்களிப்பை உறுதி செய்யக் கழகம் புதிய முயற்சியாக மகளிர் அணியை உருவாக்கியது. திருமதி பானுமதி ராமச்சந்திராவின் தலைமையில் 2002ம் ஆண்டு அது தொடங்கப்பட்டது. 2003ம் ஆண்டு முதல் பாரதியார் – பாரதிதாசன் விழாவை மகளிர் அணியினரே தலைமையேற்று நடத்தி வருவது பெருமையோடு குறிப்பிடத்தக்கது.