
என் அருமை தோழா ! 
 
 ஓடு நீயும் 
 விரைந்து ஓடு 
 உன் எல்லைகள் 
 விரியட்டும் 
 விரைந்து ஓடு ! 
 
 ஆதி மனிதனாய் 
 இருந்திருந்தால் 
 ஆகாசத்தை 
 பார்த்தே வியந்திருப்போம் ! 
 
 எண்ணங்கள் விரிந்ததினால் 
 விண்ணுலகையும் ஆள்கிறோம் ! 
 
 சாதனை கதைகளை 
 பல படித்து 
 தாழ்வு மனப்பான்மையை 
 புறம் தள்ளு ! 
 
 உன்னையும் பலர் படிக்க 
 உன்னுடல் உழைப்பை 
 நீ செலுத்து ! 
 
 கவலைகளை கொண்டு 
 இலட்சியத்தை செதுக்கு 
 தோல்வியதனை 
 கூண்டோடு ஒடுக்கு ! 
 
 காணும் கனவினில் 
 ஏற்றத்தை கண்டு 
 நாளும் அதனை 
 நினைவில் கொண்டு 
 
 வாழ்வில் நீயும் நடைபோடு ! 
 நாளை 
 வெற்றிகள் தொடரும் உன் பின்னோடு !