Thirukkural Vizha 2020 போட்டிகள்

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

Tamil Language and Cultural Society

72 Bendemeer Road #05-21, Luzerne, Singapore 339941
Tel No: 6295 3258 Fax No: 6225 2004 UEN NO S79SS0032L
Email: tlcs@ibmc.com.sg Website: www.tamilmozhi.org

Thirukkural Vizha 2020 போட்டிகள் – விண்ணப்பப்படிவம்

35 ஆத்திசூடிப் பாடல்களை மனனம் செய்து ஒப்புவிக்கும் போட்டிபாலர் வகுப்பு 2


35 ஆத்திசூடிப் பாடல்களை மனனம் செய்து ஒப்புவிக்கும் போட்டி

 • மாணவர்கள் கொடுக்கப்படும் 35 ஆத்திசூடிப் பாடல்களை மனனம் செய்து ஒப்புவிக்க வேண்டும்.
 • ஒரு பள்ளியிலிருந்து இரண்டு  மாணவர்கள் மட்டுமே இந்தப் பிரிவில் பங்கு பெறலாம்.
 • 5 நிமிடங்கள் நேரம் கொடுக்கப்படும்.
 • ஒப்பிக்கும்போது உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.


ஆத்திசூடிப்பாடல் வரிகள் 1 - 35


 

 

 

 

 

அறம் செய விரும்பு

ஓதுவது ஒழியேல்

நன்றி மறவேல்

அனந்தல் ஆடேல்

ஆறுவது சினம்

ஔவியம் பேசேல்

பருவத்தே பயிர் செய்

கடிவது மற

இயல்வது கரவேல்

அஃகஞ் சுருக்கேல்

மண் பறித்து உண்ணேல்

காப்பது விரதம்

ஈவது விலக்கேல்

கண்டு ஒன்று சொல்லேல்

இயல்பு அலாதன செய்யேல்

கிழமைப்பட வாழ்

உடையது விளம்பேல்

ஙப் போல் வளை

அரவம் ஆடேல்

கீழ்மை அகற்று

ஊக்கமது கைவிடேல்

சனி நீராடு

இலவம் பஞ்சில் துயில்  


எண் எழுத்து இகழேல்

ஞயம்பட உரை

வஞ்சகம் பேசேல்


ஏற்பது இகழ்ச்சி

இடம்பட வீடு எடேல்

அழகு அலாதன செய்யேல்


ஐயமிட்டு உண்

இணக்கம் அறிந்து இணங்கு

இளமையில் கல்


ஒப்புரவு ஒழுகு

தந்தை தாய்ப் பேண்

அறனை மறவேல் 

நாள்   :    21-07-2019

 


நேரம் :    காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை [மாணவர்கள் 30

நிமிடங்களுக்கு முன்பே வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்]


இடம்  :    உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், 2, பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954


கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாகப் படித்த பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பதிவு செய்யவும். 

விதிமுறைகள்

 • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப்படிவங்களை 10.07.2019 மாலை 5.00 மணிக்குள் ஏற்பாட்டாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாகக் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் மறுக்கப்படலாம்.
 • 21 ஜூலை 2019, காலை 11.00 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இப்பள்ளி 2, பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954 என்ற முகவரியில் அமைந்துள்ளது.
 • போட்டிகள் நடைபெறும்  இடமோ தேதியோ மாற்றப்பட்டால், உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இதற்குத் தங்களது நல்லாதரவையும் புரிந்துணர்வையும் வேண்டுகிறோம்.
 • போட்டியாளர்கள் சரியான நேரத்திற்கு வந்து பதிவு செய்யுமாறு  அவர்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். தாமதமாக வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம்.
 • நடுவர்களின் முடிவுகள் இறுதியானவையாகும்.
 • பதிவுக்கட்டணம் எதுவும் கிடையாது.
 • போட்டியன்று மாணவர்கள் பள்ளிச் சீருடையில் வரவேண்டும்.
 • போட்டியன்று மாணவர்கள் எந்த ஓர் ஆவணமும் எடுத்து வர வேண்டியதில்லை.
 • ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பள்ளியிலிருந்து வரும் போட்டியாளர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு உண்டு.
 • அனைத்துப் பிரிவுகளுக்கும் போட்டியாளர்களை அனுப்ப வேண்டும் என்ற கட்டாயமில்லை.
 • போட்டி நடைபெறும் அறைகளுக்குச் செல்லப்  பெற்றோர்களுக்கு அனுமதி கிடையாது.
 • கழகத்தால் நியமிக்கப்பட்ட புகைப்படக் கலைஞரைத் தவிர வேறு யாரும் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது.
 • போட்டிகளுக்கான பதிவு பள்ளிகளின் மூலமாக மட்டுமே ஏற்கப்படும்.
 • போட்டிகளின் இறுதி  முடிவுகள் பள்ளிகளுக்குத் தெரிவிக்கப்படும்.
 • போட்டிகளில் பங்கேற்ற அனைத்து  மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் அவர்களது பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
 • 11 ஆகஸ்டு 2019 அன்று நடைபெறவிருக்கும் "ஒளவையார் விழா 2019" நிகழ்ச்சியின்போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். அந்நிகழ்ச்சி 2, பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954 என்ற முகவரியில் அமைந்துள்ள உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். அனுமதி இலவசம்!
 • தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு நாங்கள் எடுக்கும் இம்முயற்சி வெற்றி பெறத் தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். மேலும் விவரங்களுக்குத் துணைத்தலைவர் திருமதி லலிதா அவர்களை 90604464  என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளவும்.

 

தொடர்புக்குலலிதா: 90604464  | வளர்மதி: 91823424  சாந்தி: 82079775


PLEASE COMPLETE ALL THE FIELDS IN THE BELOW FORM

IN ENGLISH ONLY

Back

பள்ளியின் விவரம்

பள்ளியின் வகை (School Category)
பள்ளியின் பெயர் (School Name)

போட்டியாளர் விவரம்

பெயர் (Name) *
வகுப்பு (Class)*
மின்னஞ்சல் (Email) *
தொலைபேசி எண் (Tel No/ HP) *
வீட்டு முகவரி (Home Address)
NRIC NO *
XXXXX

தமிழாசிரியர் விவரம்

தமிழாசிரியர் பெயர் *
கைத்தொலைபேசி எண் *
தமிழாசிரியர் மின்னஞ்சல் *

கேப்ட்சா குறியீடு
captcha reload
கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்

  Reset
**நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கழகத்துக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 10-07-2019